Published Date: June 29, 2024
CATEGORY: LEGISLATIVE ASSEMBLY
சென்னை பெருங்குடியில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு.
சென்னை பெருங்குடியில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
அறிவிப்புகள்:
சட்டசபையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் அறிவிப்புகளை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:
அரசின் சேவைகளை டிஜிட்டல் மயமாக்க தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஆகியவற்றின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த தனித்து இயங்கும் ஒழுக்க முறை அமைப்பு உருவாக்கப்படும்.
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவையின் கீழ் செயல்படும் நிறுவனங்கள் மறு சீரமைக்கப்படும். தமிழ்நாடு மின்னணு நிறுவனம் சென்னை பெருங்குடி தொழில்பேட்டையில் ஏறத்தாழ 3.60 ஏக்கர் நிலத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு கல்லூரிகள் மற்றும் பிற நிறுவனங்களில் அதிவேக இணையதள சேவை குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும். அரசு பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ கல்லூரிகள் ஆகியவற்றிற்கு இலவச உறுப்பினர் வசதி மூலம் இணையவழி கற்றல் நிகழ்வுகள் அறிவுசார் போட்டிகள் உள்பட 16 சேவைகள் வழங்கப்படும்.
புவிசார் கட்டமைப்பு:
சென்னை மண்டல கேந்திரியா பள்ளிகளில் வழங்கப்பட்டு வரும் சான்றிதழ், கல்வி பாடத்திட்டம் மத்திய அரசு மற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் பேச்சு தமிழ் வகுப்புகள் ஆகிய நடவடிக்கைகள் ரூபாய் 50 லட்சம் செலவில் விரிவாக்கம் செய்யப்படும்.
தமிழ் இணைய கல்வி கழகத்தால் பன்னாட்டு கணினி தமிழ் மாநாடு நடத்தப்படும். ரூபாய் 15 கோடி செலவில் புவிசார் கட்டமைப்பு உருவாக்கப்படும். ரூபாய் 3 லட்சம் செலவில் கணினி தமிழ் தொடர் சொற்பொழிவு நடத்தப்படும்.
தமிழ் இணைய கல்வி கழகத்தில் மின்நூலகத்தில் உள்ள 15 லட்சம் உருப்பட பக்கங்களை குறை வடிவில் மாற்றிட ரூபாய் 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அறிவுசார் சொத்துரிமை கண்டுபிடிப்புகளின் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படும். குறைந்த கட்டணத்தில் இணையதள தொலைக்காட்சி சேவைகள் வழங்கப்படும்.
இவ்வாறு திட்டங்களை அறிவித்தார்.
Media: DAILYTHANTHI